x

Hephzibah Jesudasan

ஹெப்சிபா ஜேசுதாசன் (1925 - பிப்ரவரி 9, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த நாவல் எழுத்தாளர். ஆங்கிலப் பேராசிரியர். தமிழ் இலக்கிய வரலாற்றை நான்கு பாகங்களாக ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர். தமிழ்நாடு குமரி மாவட்டம், தக்கலை, புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பர்மாவில் பிறந்தவர். இவரது தந்தை பர்மாவில் மர வணிகராக இருந்தவர். இரண்டாம் உலகப்போரை அடுத்து, இவரது குடும்பம் நாகர்கோயிலில் குடியேறியது. ஹெப்சிபா நாகர்கோயில் டதி பள்ளியில் கல்வி கற்றார். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, திருவனந்தபுரம் பல்கலைக்கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய ‘புத்தம் வீடு’ என்ற அவரது முதலாவது நாவல் தமிழின் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாக இன்றும் கருதப்படுகிறது. புத்தம் வீடு மலையாளத்திலும் ஆங்கிலத்தில் "லிசீஸ் லெகசி" என்ற பெயரிலும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. பேராசிரியரின் துணையுடன் ஹெப்சிபா Countdown from Solomon என்ற அவரது பெரிய இலக்கிய வரலாற்று நூலை நான்கு பாகங்களாக எழுதி முடித்தார். 2012-ஆம் ஆண்டு, பிப்ரவரி 9 - ஆம் நாள் தனது 88-வது வயதில் மறைந்தார்.

Related Products