x

Periyar E.V.Ramasamy

பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ.இராமசாமி (இயற்பெயர்: ஈ.வெ. இராமசாமி, ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் என சமூகநீதிக்காக பேசியும், எழுதியும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான பகுத்தறிவு இயக்கமாக செயல்பட்டு வரும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தருமம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தும், எழுதியும் அம்மனநிலைகள் பெருமளவு தமிழ்நாட்டில் குறையக் காரணமானவர் இவரேயாவார். ஆதிக்க மனநிலைக்கு, மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள், பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வு சுரண்டப்படுவதையும் அவர் எதிர்த்தார். அவர், தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் களைய பெரியார் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பெருந்தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார் ஈ.வெ.ராமசாமி தன்னுடைய கருத்துகளைப் பரப்புவதற்காகப் பின்வரும் இதழ்களை வெளியிட்டு வந்தார்: ‘குடிஅரசு’ (வார இதழ்) 1925 மே 2-ஆம் நாள் தொடங்கப்பட்டது. ‘ரிவோல்ட்’ (Revolt) (ஆங்கில வார இதழ்) 1928 நவம்பர் 07 ஆம் தொடங்கப்பட்டது. முதல் இதழை கோவை இரத்தினசபாபதியார் தலைமையில் பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ.சௌந்திரபாண்டியன் 6-11-1928ஆம் நாள் வெளியிட்டார். இதழுக்கு ஈ.வெ.ராவும் எசு.இராமநாதனும் ஆசிரியராக இருந்தனர். நாகம்மையார் வெளியீட்டாளராக இருந்தார். ‘புரட்சி’ (வார இதழ்) 1933 நவம்பர் 20-ஆம் நாள் தொடங்கப்பட்டது. 17.6.1934ஆம் நாள் இறுதி இதழ் வெளிவந்தது. ‘பகுத்தறிவு’ (நாளிதழ்). 1934 ஏப்ரல் 15-ஆம் நாள் தொடங்கப்பட்டு 1934 மே 27-ஆம் நாளோடு நிறுத்தப்பட்டது ‘பகுத்தறிவு’ (வார இதழ்) 1934, ஆகத்து 26-ஆம் நாள் முதல் 1935 ஜனவரி 1-ஆம் நாள் வரை 20 இதழ்கள் வெளிவந்தன. ‘பகுத்தறிவு’ (மாத இதழ்) 1935, மே 1-ஆம் நாள் தொடங்கப்பட்டது 1939 ஜனவரி வரை வெளிவந்தது. ‘விடுதலை’ (வாரம் இருமுறை) 1935, ஜூன் 01ஆம் நாள் தொடங்கப்பட்டது. ‘விடுதலை’ (நாளிதழ்) 1937, ஜூன் 1-ஆம் நாள் தொடங்கப்பட்டது ‘உண்மை’ (மாத இதழ்) ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ (The Modern Rationalist) (ஆங்கில மாத இதழ்) 1971 செப்டம்பர் 1-ஆம் நாள் தொடங்கப்பட்டது. இந்த இதழ்களிலும் தனியாகவும் ஆயிரக்கணக்கான சமூகநீதிக் கருத்துகளை ஐம்பதாண்டுகளுக்கு மேலாக பேசியும், ஆயிரக்கணக்கான கட்டுரைகளை எழுதியும் வந்த பெரியார், டிசம்பர் 24, 1973 அன்று தனது 94-ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

Related Products