Salma
சல்மா, (பிறப்பு: டிசம்பர் 19, 1967) தமிழ் எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி (தி.மு.க.). இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். தொண்ணூறுகளின் இறுதியில் எழுதத் தொடங்கினார். நூற்றுக்கணக்கான கவிதைகளையும், இரண்டு நாவல்களையும் எழுதியுள்ள சல்மா பொன்னாம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சித் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாகவும் பொறுப்பில் இருந்துள்ளார்.